5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்க முடியாது; பிரதமர்!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு வழங்கப்படும் 5000 ரூபா மாதாந்த நிவாரணக் கொடுப்பனவு ஜூன் மாதத்திற்கு வழங்கப்பட முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையுடன் இந்த மாதத்திற்கு மட்டும் வரையறுத்துக் கொள்ள நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற போது பிரதமர் மஹிந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மே மாத்திற்கான கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் இல்லை என்ற போதிலும் ஜூன் மாதத்தில் அதனை வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 5000 ரூபா கொடுப்பனவு அரசியல் பிரச்சார நோக்கில் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல்வேறு தரப்பினரும் முறைப்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post