கொழும்பில் கொரோனோ தொற்றுக்குள்ளான 70 பேர் பூரண குணமடைந்தனர்!!

கொழும்பு, கெசெல்வத்தை - பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான 97 பேரில் 70 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

குறித்த 70 பேரும் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்டாரநாயக்க மாவத்தையில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணும் குணமடைந்துள்ளார்.

இந்த 70 பேருக்குள் அவரும் உள்ளடங்குவதாக மத்திய கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி சந்திரபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் ஒரேயொரு கொரோனா நோயாளி மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் கூறப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post