யாழில் கொரோனா தொற்று சந்தேகநபர்களை ஏற்றிவந்த நோயாளர் காவு வண்டி விபத்து

கொரோனா தொற்றுக்கு இலக்காகியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி, டிப்பர் வாகனமொன்றுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ். தென்மராட்சி A9 வீதியின் மீசாலை புத்தூர் சந்திக்கருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இரணைமடு விமானப்படையின் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மூவரை அழைத்து வந்த நோயாளர் காவு வண்டியுயே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

எனினும் இதன்போது உயிர் சேதமோ, காயங்களோ யாருக்கும் ஏற்பட்டிருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதனையடுத்து கொரோனா தொற்று சந்தேகநபர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தை தடுத்து வைத்துள்ள கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post