விவசாயிகளுக்கான உலக வங்கி நிதியிலான அரசாங்கத்தின் திட்டத்தில் தவறிய மட்டக்களப்பு முயற்சியாளர்கள் திங்களன்று விண்ணப்பிக்கவும்; அரசாங்க அதிபர் அவசர வேண்டுகோள்!!

ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு
"பெருந்தோட்டக் கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்அமைச்சு வறுமையான மக்கள் வாழும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் அமுல்படுத்தும் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ள விவசாயிகளுக்கான உலக வங்கி நிதியிலான அரசாங்கத்தின் பயனுள்ள திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் கூடிய பயன் பெறவில்லை"

இவ்வாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா இத்திட்டம் பற்றி கருத்து வெளியிடுகையில் கவலை தெரிவித்தார் 

இது பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் ....

இக்குறையைப்போக்க எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பணிமனையில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டுமென்றும் செவ்வாயன்று விசேட குழுவால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவை பெருந்தோட்டக் கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படுமென்றும் தெரிவித்தார் . 

உலக வங்கி திட்டத்தில் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற தொழில் முயற்சி யாளர்கள், புதிதாக செயற்படவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் 50 வீதம்இலவச மானிய உதவியாகவும்  40 வீதம் இலகுகடன் உதவியும் அரசாங்கத்தால் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

இந்த பயனுள்ளதிட்டத்தில் விவசாயம் சார் கழிவுப் பொருள்களும் தீர்வுகளும், கால்நடைவளர்ப்பு மற்றும் பால் உற்பத்திகளும், மீன்பிடி மற்றும் நீரியவள அலங்கார மீன்கள், சிறியரக விவசாய உபகரணங்கள், வெட்டியபூக்கள், மற்றும் இனத்தொகுதி பொருட்கள், விவசாயம் சார் சக்திவலு தீர்வுகள், மூலிகைச்செடிகள் மற்றும் மருந்துவகைகள், பழவகை மற்றும் மரக்கறி வகைகள், உணவு மற்றும் மென்பானங்கள் களஞ்சியபடுத்தும் வசதிகள், சேதனவிவசாயம், போன்றவற்றுக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்க முடியுமென அறிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post