உயர் தரப் பரீட்சையில் பரீட்சாத்திகள் கணக்கிடு கருவியை பயன்படுத்த அனுமதி!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சையில் நான்கு பாடங்களுக்கு தோற்றும் மாணவர்களுக்கு கணக்கிடு கருவிகளை (calculator) பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணக்கீடு, பொறியியல் தொழில்நுட்பம்,தொழில்நுட்ப விஞ்ஞானம் மற்றும் உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான வினாத்தாள்களுக்கு விடை எழுத கணக்கிடு கருவிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித கூறியுள்ளார்.

இதனடிப்படையில் பரீட்சாத்திகளுக்கு கணக்கிடு கருவிகளை வழங்குவது தொடர்பாக கல்வியல் நிபுணர்களுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கணக்காய்வாளர் சேவைக்கான பகிரங்க போட்டி பரீட்சையில் தோற்றியவர்களுக்கு முதல் முறையாக கணக்கிடு கருவிகள் வழங்கப்பட்டன.

உயர்தரப் பரீட்சையின் போது சாதாரண ரக கணக்கிடு கருவிகளை மாத்திரமே பயன்படுத்த இடமளிக்கப்படும் என்பதுடன் அதனை பரீட்சாத்திகள் எடுத்து வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post