பெரியநீலாவணையில் விவசாய திணைக்கத்தால் மரக்கறி நாற்றுக்கள் வழங்கிவைப்பு!!கிலசன்
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை விவசாய போதனாசிரியர் பிரிவில் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களுக்கு தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின்கீழ் மரக்கறி நாற்றுக்கள் வழங்கிவைக்கப்பட்டது. 

விவசாய போதனாசிரியர் எம்.ரீ.பஸ்லுனா தொழிநுட்ப உத்தியோகத்தர் பீ.கருணா ஆகியோரால் நாற்றுக்கள் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் பெரியநீலாவணையிலுள்ள 50 விவசாயிகளுக்கு சௌபாக்கியா திட்டத்தின்கீழும் விதைகளும் நாற்றுக்களும் வழங்கிவைக்கப்பட்டன.0/Post a Comment/Comments

Previous Post Next Post