கல்முனையில் இளைஞர் வீட்டுத்தோட்டங்களில் செய்கை பண்ணப்பட்ட பயிர்கள் அறுவடை!!

செ.துஜியந்தன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் இளைஞர் வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்ட இளைஞர்களது வீட்டுத்தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளை உத்தியோபூர்வமாக அறுவடை செய்யும் நிகழ்வு கடந்த 18ம் திகதி கல்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் சௌபாக்கிய வீட்டுத்தோட்டம் திட்டத்தின் கீழ் இளைஞர் வீட்டுத்தோட்டம் அமைக்கும் பணிகள் பிரதேச மட்ட இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்களினால் வீட்டுக்கு வீடு வீட்டுத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்படும் வீட்டத்தோட்டங்களுக்கு 10ஆயிரம் ரூபாவும், மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் தோட்டங்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும், தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்படும் வீட்டுத்தோட்டங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் இளைஞர்களுக்கு பரிசாக வழங்கப்படவுள்ளன.

நற்பிட்டிமுனையிலுள்ள இளைஞர் வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்பட்ட கீரை, வெண்டி போன்றவை இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.பிரபாகரன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வி.சரன்தாஸ் ஆகியோரால் அறுவடை செய்துவைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post