மதராசாவில் தற்கொலை தாக்குதல் பாடம்; நீதிமன்றில் இருவர் சாட்சியம்!!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை அடுத்து கைது செய்யப்பட்ட 17 வயது இரண்டு இளைஞர்கள் இன்று நீதிமன்றில் மதரசா பள்ளிக்கூடங்களில் ஆயுதப் பயிற்சி சார்ந்த கற்றல்கள் இடம்பெற்றதாக சாட்சியம் அளித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்பாக குறித்த இருவரும் இரகசிய பொலிஸாரினால் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.

அம்பாறையில் மதரசா பள்ளிக்கூடம் ஒன்று தீவிரவாதி ஸஹ்ரானின் சகோதரன் ரில்வானினால் நடத்தப்பட்டதாகவும் , அதன் அதிபராக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் செயற்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் அங்கே தற்கொலை தாக்குதல்கள் பற்றி கற்பிக்கப்பட்டதாகவும் கூறிய அவர்கள், ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பிரதான நபர்கள் அங்கே கற்பித்தலில் ஈடுபட்டிருந்ததாகவும் சாட்சியத்தில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post