அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவதற்கு போதுமான நிதி இல்லை!!

அரசின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் மாதம் 64 பில்லியன் ரூபாய் வரை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

சாதாரணமாக மாதாந்தம் அரசுக்கு 150 பில்லியன் ரூபாய் முதல் 160 பில்லியன் ரூபாய் வரையான வரும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

எதிர்பார்த்த வரி வருமானம், சுங்க வரி மற்றும் மதுவரி என்பன கிடைக்காமல் போனதே இந்த வருமான வீழ்ச்சிக்கு காரணம்.

எனினும் கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்துள்ள வருமானமானது மாதாந்தம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கவும் போதுமான தொகை அல்ல.

அரச ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை வழங்க சுமார் 72 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது.

இந்த காலத்தில் வருமானம் இன்றி இயங்கும் இலங்கை போக்குவரத்துச் சபை, தொடர்ந்து திணைக்களம், விலங்கியல் பூங்கா ஆகியவற்றில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க அரசாங்கம் மேலும் 8 பில்லியன் ரூபாயை செலவிட நேரிட்டுள்ளது.

மொத்தமாக அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க 80 பில்லியன் ரூபாய் தேவைப்படும் நிலையில் அரசுக்கு 64 பில்லியன் ரூபாயே வருமானமாக கிடைத்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post