மொபைல்போன்களின் பட்டரி சார்ஜ் குறைவதை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்!!

ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்பட்டுள்ள வசதிகள் காரணமாக அவற்றின் மின் பாவனையும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இதனால் பட்டரியின் சார்ஜ் ஆனது குறைந்தளவு நேரத்திற்கே மின்னை வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

இப் பிரச்சினை தீர்வு தரக்கூடிய வகையில் கூகுள் நிறுவனம் புதிய உத்தி ஒன்றினை கையாளவுள்ளது.

அதாவது இணையப் பாவனையின்போது குரோம் உலாவியில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதை நிறுத்தக்கூடிய வசதியை தரவுள்ளது.

இதனால் ஓரளவு மின்பாவனை காலத்தினை ஸ்மார்ட் கைப்பேசிகளில் அதிகரிக்க முடியும் என கூகுள் கருதுகின்றது.

இந்த வசதியினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post