பொலிஸாருக்கு அதிக விலையில் மதுபானம் விற்க முற்பட்ட ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு அதிக விலையில் மதுபானம் விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.உரும்பிராய் பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு அதிக விலையில் மதுபானம் விற்க முற்பட்ட ஒருவரே நேற்றையதினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மது போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராயப் பகுதியில் மதுபானசாலையில் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சிவில் உடையில் பொலிஸார் மதுபானம் வாங்குவது போல சந்தேக நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு கால் போத்தல் சாராயம் ஒன்று ஐந்நூறு ரூபாய்க்கும் பியர் ரின் ஒன்று நானூறு ரூபாய்க்கும் பொலிஸாருக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவருடைய வீட்டினை சோதனையிட்ட போது குறித்த வீட்டில் இருந்து 3 கால் போத்தல் சாராயம்,10 பியர் ரின்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post