யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் தொடர்பில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது!!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்தம் மாதம் 2ம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா தொற்று குறித்த PRC மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 800க்கும் மேற்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆய்வு கூடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெற்றதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை. நாங்கள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு எந்தவொரு அறிவித்தல்களையும் வழங்கவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post