சொந்தக் காணியில் அமைக்கப்படும் செங்காமம் ஆலையத்தை தடுக்க முடியாது- பொத்துவிலில் கருணா அம்மான்


அர்ப்பணிப்பு இல்லாமல் ஒருபோதும் தமிழர் உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் சொந்தக் காணியில் அமைக்கப்படும் செங்காமம் ஆலையத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்களால் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து அப் பிரதேசத்தின் றொட்டைக் கிராமத்திற்கு புதன்கிழமை(13) மாலை திடிர் களவிஜயம் மேற்கொண்ட நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது விநாயகமூர்த்தி முரளிதரன் அங்குள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்ததுடன் அங்கு பல வருட காலமாக அக்கிராமத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் முதன்மையான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சனைக்கு உரிய தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இங்கு வாக்கு சேகரிப்பதற்காக மட்டுமே அரசியல்வாதிகள் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து விட்டுச் செல்வதுடன் இங்குள்ள மக்களின் குடிநீர் பிரச்சனை இதுவரையில் தீர்த்து வைக்கப்படாமலிருப்பது குறித்து இதற்கு பொறுப்பாகவுள்ள குறித்த நீர் வழங்கல் தொடர்பான உரிய பொறியியலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலைமைகளை கேட்டறிந்து இங்குள்ள குடிநீர் பிரச்சனையை ஒருசில வாரத்திற்குள் தீர்த்துவைக்க உரிய நடவடிக்கைகளை பெற்றுக் கொடுக்குமுhறு கேட்டுக்கொண்டார்.

மேலும் அங்குள்ள மக்கள் தங்கள் காலடி தேடிவந்து பிரச்சினைக்கு தீர்வினை பெற்று தந்தமைக்காக பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post