நாவிதன்வெளியில் இரண்டாவது முறையாகவும் வெற்றிகரமாக இரத்தான முகாம்!!

கிலசன்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் குருதி தட்டுப்பாடு கருத்தில் கொண்டு நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அன்னமலை -02 திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்முனை இரத்த வங்கியுடன் இணைந்து இரண்டாவது முறையாகவும் இரத்ததான நிகழ்வை வேப்பையடி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனர். நேற்றைய நிகழ்வின் 30 பேர் வரையிலும் குருதி தானம் செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் Dr.ரமேஷ் நாவிதன்வெளி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி Dr.மதன் ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post