யுவதியொருவரை கடத்திச் சென்ற இளைஞர் விளக்கமறியலில்!!

திருகோணமலை - மூதூர் பகுதியில் யுவதியொருவரை கடத்திச் சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரொருவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நடுத்தீவு, மூதூர் - 7, பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மனைவி வெளிநாடு சென்றுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே வெருகல் பகுதியில் உள்ள 23 வயதுடைய தமிழ் யுவதியொருவரை கடத்தி சென்று வீட்டில் வைத்து குடும்பம் நடத்திச் செல்வதாக அப்பிரதேச பள்ளிவாசலினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த குறித்த நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post