தீவிரவாதிகளுடான சண்டையில் உயிரிழந்த கணவன்; மனைவி எடுத்த முடிவு; சேர விரும்பும் மகள்!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கர்னல் அஷுதோஷ் ஷர்மா உட்பட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி என் மகளும் இராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறாள் கலங்கிய கண்களுடன் கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டம், சாங்கிமுல்லா கிராமத்தில், ஒரு வீட்டில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பொதுமக்கள் சிலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

இதில் பயங்கரவாதிகளிடமிருந்து பிணைக்கைதிகளை காப்பாற்ற முயன்ற போது, கர்னல் அஷுதோஷ் ஷர்மா, ராணுவ மேஜர் அனுஜ் சூட், காவல்துறை அதிகாரி ஒருவர் என மொத்தம் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.

இதில் மேஜர் அனுஜ் சூட்டின் மனைவி, சவப்பெட்டியில் இருந்த தன்னுடைய கணவரின் முகத்தை பார்த்த படி இருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், கர்னல் அஷுதோஷ் ஷர்மாவின் மனைவி பல்லவி ஷர்மா, அவர் இறப்புக்குப் பின் நான் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன்.

கர்னல் அஷுதோஷ் ஷர்மாவின் குடும்பத்தினர்

ஆனால், எனக்கு வயதாகிவிட்டது. எங்கள் குழந்தை தமன்னா(11) கடந்த இரண்டு நாள்களாக அவளைச் சுற்றி நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

அவளும் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விருப்பப்படுகிறாள், இராணுவத்தில் சேர்வது அவளது விருப்பமே. அவள் மனித நேயமிக்க பெண்ணாகவும் பொறுப்புள்ள குடிமகளாகவும் வளர்வது முக்கியம் என்று கூறியுள்ளார்.

கடந்த 4-ஆம் திகதி அஷுதோஷ் ஷர்மாவின் உடல் ஜெய்ப்பூருக்கு சிறப்பு ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. கர்னல் அஷுதோஷ் ஷர்மாவுக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post