மட்டக்களப்பிலிருந்து தூர சேவை பஸ் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்!!

கொழும்பு கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான போக்குவரத்து மீளவும் இலங்கை போக்குவரத்து மட்டக்களப்பு சாலையினால்  பிராந்திய பிரதம செயலாற்று முகாமையாளரின் அறிவுறுத்தலின் படி ஆரம்பிக்கப்படுகின்றது. 

இதன் முதற்கட்டமாக நாளை காலை 5:30மணிக்கு பதுளைக்கும் காலை 6:00  மணிக்கு யாழ்ப்பாணத்திற்குமான போக்குவரத்து சேவை உத்தியோகத்தரின் வேண்டு கோளுக்கு அமைவாக இக்கோரிக்கை பிரதம சாலை நிறைவேற்று அதிகாரிகளின் சிபார்சில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு சாலை முகாமையாளர் எம்.கிருஸ்ணராஜா தெரிவித்தார் இப்பயணமானது அரசதனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியதேவைகளை பூர்த்தி செய்வோர் பயணத்தை மேற்கொள்லாம் என்பதுடன் அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்ட சுகாதார ஒழுங்கமைப்பின் பிரகாரம் பயணிகள் பயணத்தை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post