நாளை முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை!!

நாளை முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் விமான சேவை லண்டன், டோக்கியோ, மெல்பேர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கே இவ்வாறு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடுகளுக்கிடையேயான சில பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, இவ்வாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இதன்பிரகாரம், மேற்குறிப்பிட்ட நாட்டுகளுக்குப் பிரயாணம் செய்ய விரும்புவோர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகளிடமோ அல்லது அருகிலுள்ள முகவர்களிடமோ பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post