யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விசேட அதிரடி படையினருடன் வந்த காவல்துறையினர் அங்கிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post