மாவை சேனாதிராஜாவிற்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சமகால நிலவரம் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.கலந்துரையாடலின் பின்னர், போராட்டத்தை விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கண்டன அறிக்கையினை முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரிடம் கையளித்துள்ளனர்.

இதேவேளை குறித்த கண்டன அறிக்கையினை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதனிடமும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post