மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டுள்ள நிலையில் சில பகுதிகளில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

போரதீவுப்பற்று பிரதேசசெயலகமானது 180 சதுரகிலோ மீற்றரை கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் 46,860 சனத்தொகை உள்ளனர். 43கிராம உத்தியோகஸ்தர் பிரிவு காணப்படுகின்றன.

போரதீவுப்பற்று பிரதேசம் வருடா வருடம் வறட்சியினால் பாதிக்கப்படுகின்ற பிரதேசமாகும். இப்பகுதியில் அதிகமான மக்கள் வாழும் பகுதியில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோயின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமலும் பிரதேசத்தில் ஏற்படுகின்ற வறட்சியினை கருத்திக் கொண்டு போரதீவுப் பற்று தவிசாளரின் வேண்டுதலுக்கு அமைவாக போரதீவுப் பற்று பிரதேசசபையினால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லீற்றர் குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

களுமுந்தன்வெளி, இளைஞர் விவசாயத்திட்டம், திக்கோடை, தும்பங்கேனி, பழுகாமம், 40ம் கிராமம், காந்திபுரம், புன்னக்குளம், பிலாலிவேம்பு, பொறுகாமம், பிலீஆறு, ஒல்லிமடு, கண்ணபுரம், நெல்லிக்காடு, வேத்திச்சேனை, செல்வாபுரம், சின்னகாந்திபுரம், 37ம் கிராமம் ஆகிய கிராமங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றது.

பிரதேசசபை செயலாளர், உத்தியோகஸ்தர்கள் பங்களிப்பின் மூலம் பிரதேசசபையின் குறித்த பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post