இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்கள் தமிழகத்தில் பறிமுதல் |

தமிழக ,இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை பொலிஸார் கைது செய்தனர்.

வீரசங்கிலிமடம் கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 37 செம்மரக்கட்டைகளை திருவாடனை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இராமநாதபுரம் அருகே தொண்டி பகுதியில் ரூபாய் 3 கோடி மதிப்பிலான ( இந்திய ரூபா )ஹெராயின், செம்மரக்கட்டைகள் செல்போன் மற்றும் ரூ 2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இவை அனைத்தும் இலங்கைக்கு கடத்த இருந்த போது இராமநாதபுரம் மாவட்ட எஸ்பி வருண் குமார் தலைமையிலான காவல் தனிப்படையினர் தகவல் கிடைத்தன் பேரில் மடக்கி பிடித்தனர்.

இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து போது, கும்பல் ஒன்று போதைப்பொருட்களை தொண்டியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவது தெரியவந்தது.

இதன்படி, திருவாடானை அருகே ஆட்டோவில் சென்றவர்களை மடக்கி பிடித்த பொலிஸார் , அவர்களிடமிருந்து 10 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
















0/Post a Comment/Comments

Previous Post Next Post