மனைவி காணமல் போய்விட்டதாக கூறிய புகார் கூறிய கணவன்; வீட்டை சோதனை செய்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

அமெரிக்காவில் மனைவி காணமல் போய்விட்டதாக கூறி புகார் அளித்திருந்த கணவன், அவரே இறுதியில் மனைவியை கொலை செய்து மறைத்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Minnesota-வை சேர்ந்தவர் Joshua David Fury 28 வயதான இவர், Maria Pew Fury(28) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 30-ஆம் திகதி Joshua David Fury, தன்னுடைய மனைவியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


இதையடுத்து பொலிசார், ஹெலிகாப்டர்கள் மூலம் பெரிய தேடுதல்களை துவங்கினர். ஆனால் அவரைப் பற்றி எந்த ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2-ஆம் திகதி இந்த ஜோடி தங்கியிருந்த வீட்டினை சோதனை செய்வதற்காக, அனுமதி பெற்ற பொலிசார், வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டின் நான்கு அடிக்கு மேல் இருக்கும் ஒரு அடித்தளத்தின், கீழே ஆதாரங்கள்(உடல் புதைக்கப்பட்டது) இருப்பது மோப்ப நாய்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இரண்டாவது முறையாக பொலிசார், குறித்த பகுதியில் தோண்டுவதற்கான அனுமதி பெற்று, வந்து தோண்டி பார்த்த போது, அங்கு Maria Pew Fury-யின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.


அவரது தலை ஒரு பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் உடலை புதைப்பதற்கு முன்பு, Joshua David Fury அவரை பிளாஸ்டிக் பையை வைத்து கழுத்தை நெரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூறுகையில், இந்த தம்பதியினருக்கு திருமணத்திற்கு பின் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக Maria Pew Fury கணவரை விட்டு பிரிந்து வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்திருந்ததாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, Maria Pew Fury கைது செய்யப்பட்டார். முதலில், மனைவி கொலை சம்பவத்தில் தனக்கு சம்பந்தமில்லை எனவும், அவரின் முன்னாள் காதலன் தான் இவரை கொன்றிருக்க வேண்டும் என்று Joshua David Fury கூறியுள்ளார்.

அதன் பின் பொலிசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில, மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், தலைக்கு மேல் ஒரு பிளாஸ்டிக் பையை வைத்து, அவரது உடலை அடக்கம் செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவளை கொலை செய்த பின் தானும் தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.

மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதால், அவர் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post