வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிக்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என கூறி பணம் மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை!!

வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிக்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் என கூறி பணம் மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரகத்தில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதாக கூறி மக்களிடம் பணம் மோசடி செய்யும் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இருந்து விமான டிக்கட்களை ஒதுக்கி தருவதாக கூறி அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் பணம் மோசடி செய்வதே இந்த மோசடி கும்பலின் நோக்கம் என தெரியவந்துள்ளது.

இணையத்தளம் ஊடாக இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களினால் ஐக்கிய அரபு எமிரகத்தில் உள்ள இலங்கையர் ஒருவரிடம் பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட ஒலிப்பதிவு ஒன்றும் ஊடங்களுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த மோசடி தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அரசாங்கத்தின் தலையீட்டில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post