பிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல இளம் சீரியல் நடிகர் மன்மீத் கிரிவால் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மன்மீத் கிரிவால் (32).

இவருக்கு சமீபத்தில் தான் ரவிந்திரா கவுர் என்ற இளம்பெண்ணுடன் திருமணம் ஆனது.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த மன்மீத் கடன் பிரச்சனையாலும் அவதிப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கவுர் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார், அப்போது படுக்கைறைக்கு சென்ற மன்மீத் நாற்காலி மீது ஏறி கொண்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார்.


இதையடுத்து நாற்காலி கீழே விழும் சத்தம் கேட்டு மன்மீத் மனைவி கவுர் அங்கு சென்று பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் கத்தினர்.

பின்னர் மன்மீத் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்தனர், அப்போது கவுர் கூறுகையில், என் கணவருக்கு சில இடங்களில் இருந்து வர வேண்டிய பணம் வரவில்லை, மேலும் கடன் பிரச்சனை, லாக்டவுனால் நடிக்க வாய்ப்பு இல்லாத நிலை போன்றவற்றால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்.

மேலும் வெளிநாட்டுக்கு சென்றுவிடலாம் எனவும் திட்டமிட்டார், ஆனால் அதுவும் லாக்டவுனால் நடக்கவில்லை.

இதெல்லாம் சேர்த்து தான் அவரை இம்முடிவை எடுக்க வைத்துவிட்டது என கூறியுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post