சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதை அடுத்து இலங்கை தேயிலைக்கான (Ceylon Tea) கேள்வி அதிகரிதுள்ளதாக தெரியவருகிறது.

இந்த கேள்வி காரணமாக சர்வதேச சந்தையில் ஒரு கிலோ கிராம் இலங்கை தேயிலையின் விலை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து காரணமாக ஏனைய தொழிற்துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் தேயிலை சார்ந்த தொழில்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே உலக சந்தைக்கு தேயிலையை விநியோகித்து வரும் ஏனைய நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால் இலங்கை தேயிலைக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்திருந்த தேயிலை தொழிற்துறை கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் எழுச்சி பெற சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Ceylon Tea என்பது பல ஆண்டுகளாக உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தேயிலையாக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post