இந்தியர்களை அழைத்து செல்ல கொழும்பு வரும் இந்திய கடற்படை கப்பல்!!

இலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியர்களை அழைத்துச்செல்வதற்காக இந்தியாவின் கடற்படை கப்பலான INS Jalashwa எதிர்வரும்முதலாம் திகதியில் இருந்து கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் சேவைகளை நடத்தவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு வந்திருந்த பல இந்தியர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

அவர்கள் தம்மை இந்தியாவுக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே இந்திய உயர்ஸ்தானிகரகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த கப்பல் பயணங்களின்போது அவசரமாக இந்தியாவுக்கு செல்லவேண்டியவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது

இந்நிலையில் இந்தியா திரும்புவதற்கு இன்னும் தம்மை இந்திய உயர்ஸ்தானிகரத்தில் பதிவு செய்துகொள்ளாதவர்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline என்ற இணையத்தின் மூலம் தம்மை பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே எயார் இந்தியா விமானமும் இந்தியர்கள் அழைத்துச்செல்வதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post