விலங்கு வேட்டையில் ஈடுபட்டு படத்தை முகநூலில் பதிவேற்றிய நபர் தொடர்பில் விசாரணை!!

விலங்குகளை வேட்டையாடி அது தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ள லசித் ரணவீர என்பரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சமூக ஊடக பதிவுகள் குறித்து ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் முள்ளம்பன்றி ஒன்றை வேட்டையாடி அதனை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post