தயவுசெய்து எம்மை அரசியல்வாதிகளின் கூட்டுக்குள் எங்களைத் திணிக்க வேண்டாம்; அனில் ஜாசிங்க கோரிக்கை!!

தயவுசெய்து எம்மை அரசியல்வாதிகளின் கூட்டுக்குள் திணிக்க வேண்டாம். காரணம் நாம் அரசியலில் ஈடுபடுவதில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில்ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முப்பது வருடங்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அரச துறையில் செயற்பட்டுள்ளோம். இதன்போது பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளோம்.

அவ்வாறு சவால்களுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து தப்பியோடவில்லை. ஆனால், நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல்வாதிகளுக்கோ அல்லது அரசியல் கட்சிகளுக்கோ கீழ் படிந்ததில்லை.

எனவே, அரசியல் நோக்கங்களுக்காக செயற்படாத அரச அதிகாரிகள் காணப்பட்டால் அவர்களை தமது அரசியல் நோக்கத்துக்குள் உள்ளீர்க்க வேண்டாம் என்று கோருகின்றோம்.

அரசியல் ரீதியானவாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்துவதற்காக எம்மை அசௌரியத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post