சிகையலங்கார நிலையங்களில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

செ.துஜியந்தன்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திலுள்ள சிகையலங்கார நிலையங்களில் இன்று கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

இருமாதங்களுக்குப்பின்னர் பிரதேசத்திலுள்ள சிகையலங்கார நிலையங்களை படிப்படியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரபணிமனையினால் வழங்கப்பட்டுள்ள சுகாதாரப்பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றத்தவறும் சிகையலங்கார நிலையங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில்பற்று மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று களுதாவளை பகுதியிலுள்ள சிகையலங்கார நிலையங்கள், அங்குள்ள ஆரம்பபிரிவு மத்திய மருந்தகம் என்பனவற்றில் பிரதேச பொதுச்சுகாதராரப்பரிசோதகர் வே.கணேசன் தலைமையில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post