ராஜிதவிற்கு பீ.சீ.ஆர் பரிசோதனை!!

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

தற்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜிதவிற்கு 21 நாட்களின் பின்னர் கொரோனா தொற்று உண்டா என்பது குறித்து கண்டறியும் நோக்கில் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிதாக விளக்க மறியலில் வைக்கும் அனைத்து சந்தேக நபர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

முன்னாள் அமைச்சர் ராஜித, நீர்கொழும்பு பல்லன்சேன தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ராஜித சேனாரட்ன பிணை மறுக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதியாகக் கூடிய சாத்தியம் உண்டு என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post