கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கே தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 445 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளில் 462 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post