பொதுத் தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பான மனுக்களை ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் நியமனம்

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக உயர்நீதிமன்றம் ஐவர் அடங்கிய நீதிபதி குழு ஒன்றை நியமித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய குறித்த நீதிபதி குழுவின் தலைவராக செயற்படவுள்ளார்.

நீதிபதிகள் குழுவில் புவனெக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் குழாமின் ஏனைய உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மனுக்கள் இந்த மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று அத தெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post