கட்டுப்பாடுகளை மீறி மது அருந்தச் சென்ற மேயர்; கடைசியாக சவப்பெட்டிக்குள் கண்டுபிடித்த பொலிசார்!!

பெரு நாட்டிலுள்ள மேயர் ஒருவர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மதுபானம் அருந்தச் சென்றுள்ளார்.

பொலிசாரைக் கண்டதும் அவர் மாயமாக, கடைசியில் சவப்பெட்டி ஒன்றிற்குள் அவரைக் கண்டுபிடித்தனர் பொலிசார்.

பெரு நாட்டிலுள்ள Tantará என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் Jamie Rolando Urbina Torres.

ஊரடங்கை மீறி அவர் மதுபானம் அருந்தச் சென்றபோது பொலிசாரிடம் சிக்கினார் அவர். தப்பியோடிய Torres, சவப்பெட்டி ஒன்றிற்குள் இறந்த நபர் போல முகத்தில் மாஸ்குடன் படுத்துக்கொண்டார்.

ஆனாலும், பொலிசார் அவரை விடவில்லை. ஊரடங்கை மீறி, சமூக விலகல் விதிகளையும் பின்பற்றாமல் மது அருந்தச் சென்றதற்காக அவரை கைது செய்த பொலிசார், அவர் கைது செய்யப்படும்போது குடிபோதையிலிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post