சம்பளத்திற்கு பதிலாக ஹெரோயின் போதைப் பொருள் வழங்கிய நபர்?

பணியாளர்கள் சம்பளம் கோரிய போது அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பதிலாக ஹெரோயின் போதைப் பொருள் வழங்கிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹோகந்தர சிங்கபுர பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை காவல்துறையினர் அண்மையில் கைது செய்துள்ளனர்.

ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் மற்றும் 790 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கட்டட நிர்மானப் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தக்காரர் ஒருவர் தம்மிடம் பணியாற்றி வரும் தொழிலாளிகளுக்கு இவ்வாறு ஹெரோயின் போதைப் பொருளை கூலியாக வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பணியாற்றிய தொழிலாளர்களின் மனைவியர் மற்றும் குடும்ப உறவினர்கள் செய்த முறைப்பாடுகளை தொடர்ந்து குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், தலங்கம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post