அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்: வடகொரிய தலைவர் கிம் ஜாங் திடீரென்று விடுத்த உத்தரவு

வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன் தமது அணுஆயுத பிரிவினருக்கு திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவு பிறப்பித்துள்ளது தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் வுன் தொடர்ந்து 20 நாட்கள் பொதுவெளியில் இருந்து காணாமல் போன பின்னர், அவர் தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவியது.

அதனையடுத்து அவர் மீண்டும் தமது சகோதரியுடன் ஒரு உர ஆலையை திறந்து வைத்து புகைப்படங்களை வெளியிட்டு, அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனையடுத்து கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் கிம் ஜாங் வுன் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது மட்டுமின்றி,

அவர் தங்களது நாட்டின் செய்தி ஊடகங்களில் தென்படுவதில் இருந்தும் தவிர்த்து வந்தார். தற்போது வடகொரிய ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


நாட்டின் அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகளைப் பற்றி விவாதிக்க கிம் ஜாங் வுன் இந்த கூட்டத்தை கூட்டியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், நாட்டின் அணுசக்தி யுத்தத் தடுப்பை மேலும் அதிகரிப்பதற்கான புதிய கொள்கைகள் மற்றும் போர்த் திறம் வாய்ந்த ஆயுதப்படைகளை உயர் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களை கிம் ஜாங் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கிம் ஜாங் வுன் திடீர் திடீரென்று மாயமாவது, கொரோனா பரவலில் இருந்து தம்மை காத்துக் கொள்ளவே என தென் கொரியா கருதுவதாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 17 சொகுசு பங்களாக்களை கொண்டுள்ள கிம் ஜாங் வுன், அதில் ஒன்றில் இருந்தே தற்போது தமது பணிகளை மேற்கொண்டு வருகிறார் என பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post