பொதுத்தேர்தல் தொடர்பான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைப்பு!!

ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை நாளையும் தொடரவுள்ளது.

இந்த பரிசீலனை நாளை ஐந்தாவது நாளாக முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நான்காவது நாளாக விசாரணைகள் ஆரம்பமானது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய, நீதியரசர்கள் புவனக்க அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகின.

இதன்போது நடைமுறை கொரோனா பரவலுக்கு மத்தியில் நீதியான தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என்று மனுதாரர்கள் 7 பேரின் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணிகள் வாதிட்டு வருகின்றனர்.

அத்துடன் தேர்தல் திகதியை மார்ச் 2ஆம் திகதி அறிவித்து மூன்று மாதக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் நடத்தப்படாமையால் அது தொடர்பான வர்த்தமானி ரத்துச்செய்யப்படவேண்டும் என்று சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.

இந்தநிலையிலேயே விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post