நியூசிலாந்து பிரதமர் காதலருடன் ஹோட்டலுக்கு வந்து செய்த நற்செயல்; குவியும் பாராட்டு!!

நியூசிலாந்து பிரதமர் தனது காதலருடன் ஹோட்டலுக்கு வந்த போது, இடம் இல்லை என்று கூறி ஹோட்டல் நிர்வாகம் திருப்பி அனுப்பிய நிலையில், இருப்பினும் அங்கு காத்திருந்து இடம் கிடைத்ததைத் தொடர்ந்து தனது காதலருடன் உணவு சாப்பிட்டு விட்டு திரும்பிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கொரோனாவை கட்டுக்குள் வந்த நாடுகளின் பட்டியலில், நியூசிலாந்து உள்ளது. இதனால், அந்நாட்டு பிரதமர் Jacinda Ardern-ஐ பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே நியூசிலாந்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதால், அங்கு தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் அங்கு மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும், சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தான், நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, தன்னுடைய காதலர் Clarke Gayford-வுடன் வெலிங்டனில் உள்ள ரெஸ்டாரென்ட்டுக்கு சென்றிருந்தார்.

ஆனால் அவர் அங்கு சென்றபோது ஹோட்டலில் இருந்த இருக்கைகள் நிரம்பிவிட்டதால், இருக்கைகள் நிரம்பிவிட்டன, உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகம் பிரதமரிடம் கூறியுள்ளது.

இருப்பினும், அவர் தான் நாட்டின் பிரதமர் என்ற கெத்தை காட்டாமல், அங்கு காத்திருந்த இருக்கை கிடைத்த பின்னர் அங்கு அமர வைக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஹோட்டலில் இருவரும் செலவிட்டனர். அங்கிருந்து திரும்புவதற்கு முன்பு ஹோட்டல் ஊழியர்களுடன் சாதாரண முறையில் பேசிக் கொண்டிருந்தார் ஜெசிந்தா.

ஊரடங்கு சமயத்தில் கிடைத்த அனுபவங்கள் உள்ளிட்டவற்றை அவர் கேட்டறிந்தார். அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.


இது குறித்து அந்த ஹோட்டலில் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அட கடவுளே, நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆலிவ், ஹோட்டலுக்கு சாப்பிட வந்தார்.

இடமில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பின் அவருக்கு இடம் கிடைக்க, சாப்பிட்டு பில் கட்டிவிட்டு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.


இதற்கு பிரதமரின் காதலர் கிளார்க் கேபோர்ட், இந்தக் குழப்பத்துக்கு நான் தான் காரணம். முன்கூட்டியே புக் செய்ய தவறி விட்டேன். சரியான முறையில் இதை நான் கையாளவில்லை. ஆனால் அவர்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து பிரதமரின் இந்த செயலை, இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post