இலங்கையில் முதன்முறையாக காணொளி தொழில்நுட்பத்தில் வழக்கு விசாரணை!!

முதன் முறையாக இலங்கையில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகியனவற்றை தொடர்புபடுத்தி இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது, வெலிக்கடை சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வலயத்திலிருந்து விசேட மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் முழு நாட்டையும் உள்ளடக்கக்கூடிய வகையில் இந்த காணொளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.0/Post a Comment/Comments

Previous Post Next Post