கட்டுநாயக்க பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!!

கட்டுநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க, மினுவன்கொட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 38 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post