கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட சமூர்த்தி நிவாரண கொடுப்பனவு ஆரம்பம்!!

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவுகள் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் கொரோனா வைரஸ் அனர்த்த கொடுப்பனவு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு புதன்கிழமை(13) மதியம் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்....

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்காம் மாத கொடுப்பனவுகள் வழங்கி முடிவுறுத்தப்பட்டுள்ளன.தற்போது மே மாத கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் வழங்கப்படவுள்ளன.ஏப்ரல் மாதம் எம்மால் ஏலவே கொடுப்பனவு வழங்கப்பட்ட குடும்பங்களுக்கே மே மாதக்கொடுப்பனவுகள் மீண்டும் வழங்கப்படவுள்ளன.அதனடிப்படையில் இம்மாதம் 18 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை மீண்டும் அந்த கொடுப்பனவுகளை வழங்கவுள்ளோம்.

மேலும் கொரோனா வைரஸ் அனர்த்த நிலைமை காரணமாக வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் இழந்த மக்களுக்காக எதிர்வரும் காலங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். எனவே பொதுமக்கள் பொறுமையுடன் இரவு பகலாக குறைந்த ஆளணியுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் எமது உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருகின்றதை கருத்திற் கொண்டு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேராம் என கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post