கொழும்பில் வாகன தரிப்புக் கட்டணம் இன்று முதல் அறவீடு செய்யப்படும்!!

வாகனத் தரிப்பு கட்டணங்கள் இன்று  முதல் அறவீடு செய்யப்படும் என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்த வாகனத் தரிப்பு கட்டணங்களை மாநகரசபை நிர்வாகம் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தியிருந்தது.

மாநகர ஆணையாளர் ரோசினி திஸாநாயக்கவினால் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் கார், கெப், வான் என்பனவற்றுக்கு மணித்தியாலத்திற்கு 50 ரூபா, மோட்டார் சைக்கிள் மணித்தியாலத்திற்கு 20 ரூபா, முச்சக்கர வண்டி மணித்தியாலத்திற்கு 30 ரூபா, பஸ் மற்றும் லொறி மணித்தியாலத்திற்கு 70 ரூபா என்ற அடிப்படையில் அறவீடு செய்யப்பட உள்ளது.

கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பகுதிகள், வாகனத் தரிப்பிடங்களில் இவ்வாறு கட்டணம் இன்று  முதல் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post