விமான தளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!

ரஷ்யாவின் Mi-8 ஹெலிகாப்டர், சோதனை ஓட்டத்தில் விமான தளம் ஒன்றில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

அந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்திருக்கலாம் என்று TASS news தெரிவித்துள்ளது.

அந்த ஹெலிகாப்டர் இராணுவத்திற்கு சொந்தமானதாகும். அதில், பயணித்த 4பேரும் கொல்லப்பட்டதாக Chukotka மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அந்த ஹெலிகாப்டர் விழுந்த விமான தளம் பொதுமக்கள் மற்றும் இராணுவ பயன்பாட்டில் இருந்துள்ளது.

இது குறித்து விரிவான விசாரணைக்கு புலனாய்வாளர்கள் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post