களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்!!

செ.துஜியந்தன்
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு செயலணியால் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

நேற்று மண்முனை தென் எருவில்பற்று பிரதம மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் களுவாஞ்சிகுடி சுகாதாரப்பணிமனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது. 

அலுவலகத்தின் சுற்றுப்புறச் சூழல் இங்குள்ள டெங்கு ஒழிப்புச் செயலணிக்குழு மற்றும் சுகாதார ஊழியர்களினால் துப்பரவு செய்யப்ட்டது.

தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுவதினால் பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறும், டெங்கு பரிசோதனை நடவடிக்கைக்காக வீடு வீடாக வரும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பிரதம பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post