போலி ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு எச்சரிக்கை!!

போலியான ஊடக அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத்தலைப்புடன் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏதேனும் ஓர் அரசியல் தரப்பு ஒன்று இவ்வாறான போலிச் செய்தியை வெளியிட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும், வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகிய இலங்கைப் பிரஜைகளுக்கு அரசாங்கம் கொடுப்பனவு ஒன்றை வழங்க உள்ளதாக இந்த போலி ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு எவ்வித கொடுப்பனவும் வழங்கப்படப் போவதில்லை எனவும் இது குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post