கிளிநொச்சி- முல்லைத்தீவு எல்லை வீதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்!

கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதிகள் அனைத்தும் இராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அங்கு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு, அலுவலகங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஏனையவர்கள் துருவிதுருவி விசாரிக்கப்பட்டு, சிலர் மட்டும், அத்தியாவசிய தேவையுடையவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் முல்லைத்தீவு வீதியில், கிளிநொச்சி மாவட்ட எலலையில்- நெத்தலியாற்று பாலத்திற்கு அண்மையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post