பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பிரேசில்

பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் மறுபுறம் அதன் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துவருகிறது.

அமெரிக்காவை அடுத்து கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில் பிரேசில் சேர்ந்துள்ளது. மூன்று லட்சத்து 30 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் உள்ள மிகப்பெரிய கல்லறைகளில் ஒன்று சா பாவ்லோவின் உள்ள விலா பார்மோசா. இங்கு கொரோனாவால் மரணம் அடைந்தவர்களுக்கு சவப்பெட்டிகள் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. புதைக்கப்பட்ட உடல்களால் கல்லறை நிரம்பி வழிகிறது.

கொரோனாவை ‘லிட்டில் ப்ளூ’ என மருத்துவர்கள் அழைக்கின்றனர். உள்நாட்டு ஏற்றுமதி சுத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வாழ்வாதரத்தை இழந்து தவிர்க்கின்றனர். ஆண்டு தோறும் சராசரியாக 217 பில்லியன் லாபம் ஈட்டும் பிரேசில் தற்போது தடுமாறி வருகிறது.டெக்ஸ்டைல்ஸ், ஷூ தயாரிப்பு, முறுக்கு கம்பிகள், ஐயன் ஓர், இயந்திர தயாரிப்பு, விமான எஞ்சின் தயாரிப்பு உள்ளிட்டவையே பிரேசிலின் முக்கிய லாபம் ஈட்டும் தொழில்கள். தற்போது மேற்கண்ட அனைத்து தொழில்களுமே முடங்கி உள்ளதால் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் பிரேசில் விழி பிதுங்கி வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post