கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!!

கட்டாரிலிருந்து நாடு திரும்புவதற்கு திட்டமிட்டிருந்து, இறுதி நேரத்தில் அந்தப் பயணம் இடைநிறுத்தப்பட்டதனால் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கட்டாரிலிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவிருந்தனர்.

எனினும் குவைட்டிலிருந்து வருகை தந்த அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால், கட்டாரிலிருந்து நாடு திரும்பவிருந்த விமானப் பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு தங்குமிட வசதிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத் ஆரியசிங்க, கட்டாருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் கட்டாருக்கான இலங்கையின் பதில் தூதுவருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டது ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post