நேற்றைய தினம் வலுவான சூறாவளியாக காணப்பட்ட "உம் புன்" சூறாவளி ஆனது தற்போதும் மிகவும் வலுவான சூறாவளியாக வளர்ச்சி!!

நேற்றைய தினம் (17.05.2020) வலுவான சூறாவளியாக (Severe Cyclonic Storm) காணப்பட்ட உம் புன் (Amphan) சூறாவளி ஆனது தற்போதும் மிகவும் வலுவான சூறாவளியாக (Very Severe Cyclonic Storm) மேலும் வளர்ச்சி அடைந்து, இன்று காலை 02.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 740km தூரத்தில் காணப்படுகிறது.

இது மேலும் Extremely Severe Cyclonic Storm ஆக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இது அடுத்து வரும் 06 மணித்தியாயங்களில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 29ம் திகதி மேற்கு வங்கத்தின் கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
                                            இன்று (18.05.2020) அதிகாலை 03.00 மணிக்கு எடுக்கப்பட்ட படம்
இதன் தாக்கத்தினால் இலங்கையின் தென்மேற்கு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழை கொண்ட காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்கு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகளில் 150mm மழை வீழ்ச்சிக்கும் அதிகமான வீழ்ச்சி பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் சில பிரதேசங்களில் மணிக்கு 50km முதல் 60km வரையான வேகத்தில் இடையிடையே காற்று வீசுவதுடன் சில பிரதேசங்கள் மேகமூட்டமாகவும் காணப்படும்.

வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்றும் பலமானதாக வீசும். எனவே பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களை தவிர்த்துக்கொள்வதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல்தாண்டி எங்களைப் பொறுத்தவரையில் இலங்கை தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் காங்கேசன்துறை முதல் மன்னார் கொழும்பு காலி ஊடான அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அதிக மழை காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 50km முதல் 60km வரையான வேகத்தில் வீசுவதுடன், சில சந்தர்ப்பங்களில் இந்தக் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் இந்த காற்றின் வேககமானது மணித்தியாலத்திற்கு 70km முதல் 80km வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்தில் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post