பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தை அழகுபடுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு!!

செ.துஜியந்தன்
பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தை அழகுபடுத்தும் செயற்திட்டத்தினை அப்பாடசாலையில 1994 ஆம் ஆண்டு கல்வி கற்று வெளியேறிய பழையமாணவர்கள் ஒன்று சேர்ந்து முன்னெடுத்துவருகின்றனர்.

ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் அங்குள்ள பாடசாலைகள் அளப்பெரும் பங்காற்றுகின்றன. பாண்டிருப்பு மகா வித்தியாலயம் கல்முனை கல்வி வலயத்திலுள்ள பழமையான பாடசாலைகளுள் ஒன்றாகும்.

இப்பாடசாலையில் கல்வி கற்று வெளியேறியுள்ள பலரும் சமூகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பான நிலையிலுள்ளனர். அந்தவகையில் 94 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்களின் முயற்சியினால் தற்போது இப்பாடசாலையின் இரு மேல் மாடிவகுப்பறைக் கட்டிடங்கள் வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டுளன. ஆத்துடன் இங்குள்ள மாணவர்களின் ஆங்கில ஆற்றலை விருத்தி செய்யும் வகையில் இலவச ஆங்கில வகுப்புக்களையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பழையமாணவர்கள் தெரிவித்தனர்.

இம் மாணவர்களைப்போன்று இப்பாடசாலையில் கல்வி கற்று இன்று நல்ல நிலையிலுள்ளவர்கள் தாங்கள் கல்வி கற்றப்பாடசாலையின் முன்னேற்றத்துக்கு உதவ முன்வரவேண்டும் என வித்தியாலய அதிபர் எஸ்.புனிதன் தெரிவித்தார்.0/Post a Comment/Comments

Previous Post Next Post